தேவேந்திர ஃபட்னாவிஸை பாராட்டும் சிவசேனா

பாஜக தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல் வருமான தேவேந்திர ஃபட்னாவிஸை சிவசேனா கட்சி பாராட்டு மழையில் நனைத்துள்ளது. எதிர்க் கட்சித் தலைவராக தனது பங்கை திறம்பட நிறைவேற்றி வருவதாக கூறியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலத்தில் உள்ள பொதுசுகாதார இயந்திரங்கள் குறித்து ஃபட்னாவிஸ் திருப்தி தெரிவித்திருப்பதால், இது அரசாங்கம் மற்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மனஉறுதியை உயர்த்தியுள்ளது என சிவசேனா தெரிவித்துள்ளது.

“எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர் மாநிலமுதல்வராக இருந்த போது இருந்ததைப் போலவே இளமையும் ஆற்றலும் மிக்கவராக உள்ளார். அவரது சமீபத்திய அறிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதில் அவர் ஒருநெருங்கிய கட்சி சக ஊழியரிடம் கொரோனா வைரஸை நேர்மறையாக பரிசோதித்தால் அவரை சிகிச்சைக்காக ஒருஅரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.” என்று சிவசேனா கட்சியின் ஊதுகுழலான சாம்னாவில் ஒரு தலையங்கத்தில் கூறியுள்ளது.

“இந்த அறிக்கைக்காக முன்னாள் முதல்வர் பாராட்டப்பட வேண்டும் என்றாலும், அவர் ட்ரோல் செய்யப்படுகிறார், அதுசரியல்ல. எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஒருநல்ல வேலையை செய்துவருகிறார்.” என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரணப் பணிகள் மற்றும் சுகாதாரவசதிகளை கண்காணிக்க ஃபட்னாவிஸ் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதாகவும், கொரோனா வைரஸுக்கு எதிராக மஹாவிகாஸ் அகாதி அரசு மேற்கொண்ட அனைத்து பணிகளிலும் திருப்தி தெரிவித் ததாகவும் சிவ சேனா மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிராவில் ஆபரேஷன் லோட்டஸ் எதுவும் நடக்கவில்லை என்று ஃபட்னாவிஸ் வெள்ளிக்கிழமை கூறினார். மஹாவிகாஸ் அகாதி அரசாங்கம் அதன் உள் முரண்பாடுகள் காரணமாக தானாகவே சரிந்துவிடும் என்றும் கூறினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னர் ஃபட்னாவிஸ் இந்த அறிக்கையை வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசியவர், ஷாவுடனான சந்திப்பு அரசியல் சாராதது என்றும், மாநிலத்தில் சர்க்கரை தொழிலுக்கு நிதிஉதவி கோருவதை நோக்கமாகக் கொண்டது என்றும் கூறினார்.

இதற்கிடையே ஃபட்னாவிஸ் தேசிய அரசியலில் முக்கிய பொறுப்புக்கு நகர்த்தப் படுகிறார் என்ற ஊகத்தையும் அவர் நிராகரித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...