எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் ஸ்வயம் சேவகர்கள் தொண்டில் ஈடுபடுகின்றனர்

இந்த கோரானா பெருந்தொற்றிற்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்து உள்ளது. பாரத சமூகமும் இந்த பெருந்தொற்றால் ஏற்பட்ட சவாலை மிக அருமையாக ஒரு தனித்தன்மையுடன் சமாளித்து உள்ளது. இந்த ஒட்டுமொத்த COVID-19 நிலைமையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் ?
– ஆங்கில வார பத்திரிக்கை ஆர்கனைசர் கேள்விக்கு

ஸ்ரீ சுரேஷ் பையா ஜி ஜோஷி அகிலபாரத செயலாளர், RSS. அவர்களின் பதில் :

இவ்வளவு பெரிய உலக பெருந்தொற்று என்பது இந்த காலகட்ட மக்களுக்கு மிகவும் புதியது. ஆனால் RSS ஸ்வயம்சேவகர்கள் இந்த நாட்டில் எந்த ஒரு பேரிடர் காலத்திலும் ஓடோடி வந்து உதவியும், சேவையும் செய்து மக்களின் துயரை துடைப்பவர்கள். . அதையேதான் இந்த கொரானா பெருந்தொற்று காலத்திலும் அவர்கள் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் லாக் டவுன் என்னும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்த உடன், தினக்கூலிகளும், அன்றாட வேலையை நம்பி இருந்த உழைப்பாளர்களும் வாழ்வா? சாவா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இதை அறிந்த ஸ்வயம்சேவகர்கள் அவர்களுக்கு உடனடி அடிப்படை உணவு, மற்றும் சமையல் பொருட்களை அளித்தனர். மேலும் இந்த முழு ஊரடங்கால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள் என்பதை உணர்ந்து இவர்களுக்கு ஒரு மாதம் , அதற்கு மேலும் தேவை படும் சமையல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது. தேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பணி நடைபெற்றது. இதன் மூலம் நாடு முழுவதும் இந்த பணியில் 2 லட்சம் ஸ்வயம்சேவகர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதன் பயனாக ஸ்வயம்சேவகர்களால் தேசம் முழுவதும் நிவராண பொருள்களும், உதவியும் கிட்ட தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுதான் ஆரம்பகட்ட நாட்களில் தேவையாக இருந்தது.

நாட்கள் நகர நகர புதிய சவால்கள் எழுந்தன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த நகரம், கிராமம் நோக்கி தங்கள் வயதான தாய் தந்தையர், குழந்தைகளுடன் நடக்க ஆரம்பித்தனர். இவர்களுக்கு RSS இன் ஸ்வயம்சேவகர்கள் பல இடங்களில் உணவளித்தனர். இது அல்லாமல் பல வழிகளிலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஸ்வயம்சேவகர்கள் உதவ தொடங்கினர். அவர்களுக்கு பாதணி ஏற்பாடு செய்வது, வழிப்பயணத்தில் நோயுற்றோருக்கு மருத்துவர் மூலம் மருத்துவ வசதி ஏற்பாடு செய்வது, மருந்துகள் கிடைக்க செய்வது போன்ற பணிகளை செய்தனர். இது போன்ற பணிகள் அடுத்த 40 நாட்கள் நடந்தன. மேலும் நாட்டின் பல பகுதிகளில் சங்க ஸ்வயம்சேவகர்கள் உள்ளூர் நிர்வாகத்துடன் ஆலோசித்து இந்த புலம் பெயர் தொழிலார்களுக்கென தனி பதிவு ஏற்படுத்தும் பணியினையும் ஒருங்கிணைத்தனர்.

ஸ்வயம்சேவகர்கள் தற்போதைய சூழ்நிலைக்கு என்ன செய்யவேண்டும் என்பது போன்ற விஷயங்களில் உள்ளூர் அரசு நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்தனர் , மேலும் தாங்கள் இந்த சூழ்நிலையில் இதில் எவ்வாறு தன்னார்வலர்களாக இருக்க முடியும் என்பதை கேட்டறிந்து அதற்கேற்றாற்போல் செயல் பட்டனர். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்ன வென்றால் சில இடங்களில் தங்கள் உயிருக்கும், உடல்நிலைக்கும் அச்சம் தரும் செயல்களில் கூட ஸ்வயம்சேவகர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த பகுதிகளில் பணியாற்றி உள்ளனர், அங்கு பணி புரியும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு உதவி புரிந்துள்ளனர். மேலும் பல நகரங்களில் , போதுமான பயிற்சி பெற்று, தொற்று அறியும் பரிசோதனை பணியிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

டெல்லி யில் பல்வேறு காரணங்களுக்கான உதவி மையங்கள் திறக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றான வடகிழக்கு மாகான மக்கள் மற்றும் மாணவர்களுக்கான குறைகேட்பு மையம் திறக்கப்பட்டது. துயரத்தில் வாடும் மக்களுக்கு அத்தியாவசிய பொருள் மற்றும் உணவு வழங்கும் உதவி மையம் ஒன்றும் திறக்கப்பட்டது. இந்த விஷயத்தில் பல தர்ம ஸ்தாபனங்கள் தங்களின் உதவி கரங்களை நீட்டி உள்ளனர். கோவில்கள், \குருதுவாராக்கள், ஜைன மந்திர்கள் இந்த பணியில் தங்களை நாடெங்கும் இணைத்து கொண்டனர். பல இடங்களில் சுழற் சங்கமும், அரிமாசங்கமும் கூட தங்களை முழுமையாக இந்த பணியில் ஈடுபடுத்திக்கொண்டனர். இந்த இக்கட்டான கால கட்டத்தில், தேசமெங்கும். சிறு குறு, பெரும் நிறுவனங்கள் பலவும் அவர்களுக்கே உரித்தான பாணியில் தங்கள் தொண்டினை ஆற்றி உள்ளனர்.

சங்க ஸ்வயம்சேவகர்களுக்கு இது போன்ற தொண்டாற்றும் எண்ணம் எவ்வாறு தோன்றுகிறது? இதற்கென அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறதா?

நாங்கள் ஒன்றும் பேரிடர் மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல. ஆகையால் நாங்கள் எதுவும் பிரத்யேக பயிற்சி ஒன்றும் இது சம்பந்தமாக அளிப்பது இல்லை. ஆனால் சங்க பாவத்திலேயே துயருற்றோருக்கு உதவ வேண்டும் என்பது ஸ்வயம்சேவகர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆகையால் எங்கெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஸ்வயம்சேவகர்கள் தன்னிச்சையாக தொண்டில் ஈடுபடுகின்றனர். நாங்கள் பயிற்சியெல்லாம் கொடுப்பது இல்லை; இன்னும் சொல்லப்போனால் இது போன்ற சூழ்நிலைக்கு தேவையான உபகரணங்களை கூட நாங்கள் கொடுப்பது இல்லை. ஸ்வயம்சேவகர்கள் தன்னிச்சையாக சமூக மக்களை தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்கின்றனர்.

என்ன செய்யவேண்டும் என்பதற்கான உத்தரவுகளை கூட நாங்கள் பிறப்பிப்பது இல்லை. இதற்கான மேலிட பொது தயாரிப்புகளும் எங்களிடம் இல்லை. ஆனால் ஸ்வயம்சேவகர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தங்களுடையதாக பார்ப்பதால்; இக்கட்டான சூழ்நிலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிராமல், சூழ்நிலைக்கேற்ப தங்களை தாங்களே தயார் படுத்தி கொள்கிறார்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...