ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல்தான் நிலவுகிறது

 ஆந்திர மாநில  காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல்தான் நிலவுகிறது ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கும் அம்மாநில மத்திய மற்றும் கேபினட் அமைச்சர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு சுத்தமாக இல்லை என பா.ஜ.க தேசிய செயலாளர் கே.லட்சுமணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது – கிரண் குமார் ரெட்டிக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்குமிடையே ஒருங்கிணைப்பே இல்லை. ஆளும் காங்கிரஸ்கட்சிக்குள் கோஷ்டி பூசல்தான் நிலவுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கிரண்குமாரும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஒருவருக் கொருவர் ஒத்துழைப்பு தருவதில்லை .

ஐதராபாத் மெட்ரோரயில் திட்டத்தின் 2வது கட்ட துவக்கவிழா நடந்த போது மத்திய விஞ்ஞான, தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி அதில் கலந்து கொள்ளவில்லை. இதுஒன்றே இவர்களுக்கிடையே இருக்கும் வேற்றுமைக்கு சாட்சி. இத்தனைக்கும் ஜெய்பால் ரெட்டி ஐதராபாத்தில் தான் இருந்திருக்கிறார். ஆனால் அவர் விழாவுக்கு வரவில்லை. அதுமட்டுமல்ல. கிரண்குமார்ரெட்டி தலைமையில் மாநில_அமைச்சரவை கூட்டம் 4 மாதங்களுக்குபிறகு சமீபத்தில் நடைபெற்றது. இதிலும் பல் வேறு காரணங்களை காட்டி 7 மந்திரிகள் கலந்து கொள்ளவில்லை. இப்படித் தான் நடக்கிறது கிரண் குமார் ரெட்டியின் ஆட்சி. இவ்வாறு கிரண் குமார் ஆட்சியின் அவலங்களை புட்டுப் புட்டு வைத்தார் லட்சுமணன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...