சேதுசமுத்திர திட்டத்தை நிறை வேற்றும் போது, ராமர்சேது பாலத்திற்கு எந்த வித சேதமும் ஏற்படாமல் அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அப்படி சேதம் ஏற்பட்டால், அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்,” என்று பா.ஜ.க தகவல் தொடர்பாளர், ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.
இந்திய – இலங்கை இடையே, பாக்ஜலசந்தியின் குறுக்கே, 30மீ அகலம், 12மீ ஆழம் மற்றும் 167 கி.மீ., நீளத்திற்கு, சேதுசமுத்திர கால்வாய் அமைக்க திட்டமிடப் பட்டது. அதன் வழித்தடத்தில் இருக்கும் , இந்துக்கள் புனிதமாக கருதும், ராமர்சேது பாலத்தை இடிக்கக்கூடாது என்று இந்து மத சான்றோரும், இந்து மத அமைப்பினரும்,, பா.ஜ., வினரும் வழியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து , உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் , “ராமர்சேது பாலம் வழி அல்லாது, வேறுவழியில் சேதுசமுத்திர கால்வாய் திட்டப்பணியை முடிக்கலாமா’ என்று , ஆய்வுசெய்து அறிக்கை தரும்படி, மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து பச்சவ்ரி என்பவரின் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியோ, “சேதுசமுத்திர கால்வாய் பணியை, ராமர்சேது பாலம் வழியாக நிறைவேற்றுவது, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக சாத்தியம் இல்லாதது’ என தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசோ , ராமர்சேது பாலம் வழியாக, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முனைப்புடன் இருக்கிறது .
இந்நிலையில், இதை பா.ஜ.க தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கண்டித்துள்ளார்: இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; ராமர்சேது பாலம், கோடிக் கணக்கான இந்துக்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கையுடன் தொடர்புடையது . அதற்கு எந்த விதத்திலாவது தீங்கு நேர்ந்தால், அதை, பா.ஜ.க , பொறுத்துக்கொள்ளாது. பச்சவ்ரி கமிட்டியின் பரிந்துரைகளை புறக்கணித்துவிட்டு, சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்ற முற்படுவது சரியல்ல.ராமர்சேது பாலம் இல்லை என்றால் , நீங்கள் ராமாயணத்தை குறித்தே நினைக்க முடியாது. இந்த திட்டத்துக்கு, 800 கோடி ரூபாய், ஏற்கனவே செலவுசெய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. எவ்வளவு செலவானது என்பது பிரச்னையல்ல. முதல் கட்டத்திலேயே, இத்தனைதொகையை ஏன் செலவிடவேண்டும்? என்று கேள்வி எழுப்பினர்.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.