ம.பி., சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பெண்களுக்கு 50சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு வரும் நவம்பர்மாதம் சட்டமன்ற
தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றதேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கிறது .
உள்ளாட்சிதேர்தலில் மட்டும் பெண்களுக்கு 33சதவீத இடஒதுக்கீடு அளிக்க பஞ்சாயத்து ராஜ்சட்டம் வகைசெய்கிறது. பலமாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கிவருகின்றன. மத்தியபிரதேச மாநிலத்தில் தான் முதன் முறையாக உள்ளாட்சிதேர்தலில் பெண்களுக்கு 50சதவீத இடங்கள் ஒதுக்க சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில் வர விருக்கும் சட்ட மன்ற தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 50 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்க மாநிலமுதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் முடிவுசெய்துள்ளார். ஹோஷங்கா பாத்தில் நடந்த அரசுவிழா ஒன்றில், மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் முன்னிலையில் இந்தஅறிவிப்பை சவுகான் வெளியிட்டார். ஆண்கள் வீட்டிலிருக்க பெண்கள் ஆட்சிசெய்யும் நேரம் வந்துவிட்டதாக அவர் கூறினார்.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.