பாஜக., வில் இருந்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி எம்.பி.கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல் பட்டதால் நீக்கப்பட்டுள்ளார்.
சென்ற வருடம் கட்சியின் தேசிய தலைவராக இருந்த நிதின்கட்காரிக்கு எதிராக கருத்துதெரிவித்ததற்காக ராம் ஜெத்மலானியை கட்சிமேலிடம் நீக்கியது. அதன் பின்னர் அவர் மன்னிப்பு கோரியதை தொடர்ந்து அவர் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார் .ஆயினும் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக அவ்வப்போது கருத்துதெரிவித்து வரும் ராம்ஜெத்மலானி, கட்சியின் கொள்கைகள் மற்றும் முடிவுகள்குறித்தும் அண்மையில் விமர்சித்திருந்தார்..
இந்நிலையில் ராம்ஜெத் மலானியின் கட்சிவிரோத பேச்சுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் பதில்அளிக்காததால், அவரை கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கியுள்ளதாக பா.ஜ.க செய்திதொடர்பாளர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.கட்சியின் பாராளுமன்றக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் இனிமேல் ராம்ஜெத்மலானி மாநிலங்களவையில் சுயேட்சை உறுப்பினராக கருதப்படுவார் என்றும் அவர் மேலும்தெரிவித்தார்.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.