ஓ…….மாமா……டவுசர் அவுந்துச்சே……

 இன்று காலை நடை பயிற்சி செய்யும் போது எப்போதும் காதில் மாட்டிக்கொள்ளும் "ஐ பாடை"மாட்டிக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன்..

அது வழித் துணைதான்..காதில் என்னபாட்டு ஒலித்தாலும் மனம் பெரும்பாலும் ஏதாவது சிந்தனையில் மூழ்கியிருக்கும்.இன்றும் அப்படித்தான் இருந்தது..

ஆனால் மனதை ஏதோ ஒன்று அழுத்தியது..பேய் பிசாசு கத்துவது போல ஒரு சத்தம்…இதுவரை சென்னை சேரிகளில் மட்டும் கேட்ட வார்த்தை போல ஒன்று திரும்பத்திரும்ப –வேறு வேறு சப்தங்களில் வந்து காதில் வீழுந்த வண்ணம் இருந்தது…

கூர்ந்து கூர்ந்து கவனித்தும் புரியவில்லை..மீண்டும் மூளையை , கூர்மையாக்கி மனதை ஒருமுகமாக செலுத்தி..கேட்டேன்..

அந்த பாடலின் முதல் வரி—ஏன் எல்லா வரிகளும் இதுதான்.

" ஓ மாமா..டவுசர் அவுந்துச்சே "—

இந்த புனிதமான வார்த்தை—நாலடியார் தந்ததா ?—திருக்குறளிலிருந்து திருடப்பட்டதா? அல்லது பதினெண்கீழ்கணக்கு நூல்களில் வரும் வரிகளா? என்று குழம்பி என்னை நானே ஏமாற்றிக்கொள்ள வில்லை..

சீனிமாவின் தரம் தாழ்ந்து போனதாக நான் நினைக்க வில்லை..நம் ரசனைகளைத் தானே சினிமா பிரதிபலிக்கிறது..எதிரொலிக்கிறது…

ஒருவேளை ரசனையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என நாம் நினைத்தாலும், இப்படியொரு "அருமையான பாடலை" ( ஆம் பாடலை?) நம் கிட்டத்தில் வைத்து நம்மை "மட்டரகமாக " ஆக்குவதில் சினிமா கெட்டிக்காரத்தனமானது..

ஒன்று மட்டும் ஆச்சரியமாக இருந்தது..ஒரே ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு அந்த இசை அமைப்பாளர் ( அவர் யார் என்று தெரியவில்லை)..அத்தனை ஸ்வரங்களில், அத்தனை ராகங்களில்,( எனக்கு ஸ்வரமும் தெரியாது—ராகமும் தெரியாது )பாட்டை கொண்டு சென்றிருப்பது…

"தமிழா உன்னிடம் எவ்வளவு திறமை இருக்கிறது—அதை இன்னும் உருப்படியாக பயன் படுத்தலாமே" என்று நினைக்கத்தோன்றியது.

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...