கறுப்புபணத்தை உருவாக்குவோர் தண்டிக்க படுவார்கள், தண்டிக்கும்சந்தர்ப்பம் விரைவில் வரும் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் (சி.ஏ.) மாணவர்களின் தேசிய மாநாடு நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது . கறுப்புபணத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. சிஏ. படித்தவர்கள் கறுப்புபணம் உருவாவதை தடுக்கமுடியும். அதன் மூலம் நாட்டின் சமூக கட்டமைப்பினை மேம்படுத்துவதில் அவர்கள் பெரியபங்காற்ற முடியும்.
சி.ஏ.படித்தவர்கள் தாக்கல்செய்யும் தணிக்கை அறிக்கை, வெறும் அறிக்கைகள் மட்டுமே அல்ல. மக்களின்நம்பிக்கை மற்றும் அவர்களது பொருளாதார ரீதியான முடிவுகளை அடிப்படையாக கொண்டது. தணிக்கை அறிக்கைகளில் அடிப்படையில் தான் சாதாரணமக்கள் தங்களது பொருளாதார ரீதியான முடிவுகளை எடுக்கின்றனர்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரகொள்கைகளால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. பணம் கறுப்பல்ல. ஆனால், கறுப்புமனம் கொண்டோரிடம் இருந்துதான் கறுப்புபணம் உருவாகிறது. கறுப்பு பணத்தை உருவாக்குவோர் தண்டிக்கப்படுவார்கள். நாட்டில் கறுப்புபணம் பெருக பின்னணியில் இருப்பவர்கள் அனைவரையும் தண்டிக்கும்சந்தர்ப்பம் விரைவில் வரும். என்று நரேந்திர மோடி பேசினார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.