மலாலா யூசப் சாய் 13 ஜூலை, 2013 அன்று நியூயார்க்கில் ஐ.நா சபையில் பேசியதில் குறிப்பாக ஒருவாக்கியம் என்னை மிகவும்கவர்ந்தது. தலிபான்கள் அவர் மீது நடத்திய கொலை வெறி தாக்குதல் குறித்து பேசும்போது அவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.
"தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டகுண்டுகள் என்னை மௌனமாக்கிவிட்டன என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள்தோற்றுவிட்டனர். என்னுடைய பலவீனம், பயம், நம்பிக்கை யின்மை மட்டுமே இறந்தது."
தலிபான்களின் தாக்குதலுக்கு இதைவிட மிக பெரிய எதிர்தாக்குதலை வேறுயாரும் நடத்திவிட முடியாது. அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல்கள் தலிபான்களுக்கு ஏற்படுத்திய அழிவைவிட, இச்சிறுபெண் தன் சொற்பொழிவினால் தலிபான்களுக்கு தார்மீகரீதியில் மிகப் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளார். தலிபான்களை இதை விட யாரும் அவமானப்படுத்த முடியாது.
13 ஜூலை, 2013 அன்று மலாலாவின் பதினாறாவது பிறந்தநாள். இந்நாளை MALALA DAY" என ஐ.நா அறிவித்துள்ளது. இதை பற்றி மலாலா பேசும் போது இது என்னுடைய நாள் அல்ல. இது தங்களின் உரிமைக்காக குரல்எழுப்பும் ஒவ்வொரு சிறுவன், சிறுமி, பெண்ணின் நாள்ஆகும் . தலிபான்கள் எவ்வளவு பெரியகோழைகள் என்பதை மலாலாவின் மனஉறுதி உலகிற்கு காட்டியுள்ளது. தலிபான்களை அழிக்க ஆயுதங்கள்தேவையில்லை. மலாலா போன்ற மன உறுதிமிக்க பெண்களே போதும்.
பாகிஸ்தானில் மட்டும் 50 லட்சம் சிறுவர்கள் பள்ளிக்குசெல்லாமல் இருக்கிறார்கள் என ஒருகணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்குழந்தைகள் எனபது குறிப்பிடத்தக்கது. மலாலாவை கொலைசெய்து மற்றபெண்களுக்கு உயிர்பயத்தை ஏற்படுத்த நினைத்த தலிபான்கள் ஒருவிஷயத்தை மறந்துவிட்டார்கள். அது உலகிலேயே மிகவும் மதிப்புவாய்ந்தது சுதந்திரம் என்பதைத்தான். அது ஆயுதத்தின்முன் சமரசம் ஆனதாக என்றுமே வரலாறு இல்லை.
நன்றி ; விஜயகுமார்
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.