சிறுபான்மையின மக்களின் ஆதரவும்தேவை

 அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத்தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற சிறுபான்மையின மக்களின் ஆதரவும்தேவை என குஜராத் முதல்வரும், பா.ஜ.க தேர்தல் பிரசாரக்குழுவின் தலைவருமான நரேந்திரமோடி கூறியுள்ளார்.

பா.ஜ.க.,வின் தேசிய பிரசாரக்குழுக் கூட்டம் ராஜ்நாத்சிங் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை தில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குஜராத்முதல்வரும், பிரசார குழுவின் தலைவருமான நரேந்திரமோடி, மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண்ஜேட்லி, பாஜக செய்தித் தொடர்பாளர்கள் ரவிசங்கர்பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது : குஜராத்தில் 20 முதல் 25 சதவீத இஸ்லாமியர்கள் பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த சூழ் நிலையில் நாடுமுழுவதுமே இதேபோன்ற ஆதரவை நாம் ஏன்பெற முடியாது? எனவே அனைத்து சிறுபான்மையினரின் ஆதரவையும்பெறுவது அவசியம். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இளைஞர்கள் தான் மாற்றத்தை விரும்புபவர்களாக இருக்கின்றனர் . அவர்களையும், முதல் முறையாக வாக்களிப்பவர்களையும் கவரவேண்டியது மிகவும் முக்கியம்.

மத்திய அரசின் பலவீனமான பொருளாதாரமேலாண்மை குறித்து பா.ஜ.க நிர்வாகிகள் தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டும். காங்கிரஸ் கூட்டணியின் தவறான ஆளுகை குறித்து மக்கள்மன்றங்களில் பிரசாரம் செய்யவேண்டும். நமது கட்சியின் ஆணிவேராக இருப்பது தொண்டர்கள்தான். அவர்களை ஒன்றுதிரட்டி வலுப்படுத்த வேண்டும். மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளும் காங்கிரஸ்கூட்டணி அரசுகளுக்கு எதிராக போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தவேண்டும். அடுத்த 200 நாள்களில் இப்பணிகளை நாம் செய்தாகவேண்டும் என்றார் நரேந்திரமோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.