சென்னைக்கு நரேந்திர மோடி இன்று வருவதையொட்டி சுமார் 68 சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனசோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
பாஜக பிரதம வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்தி ரமோடி வெள்ளிக்கிழமை சென்னை வருகிறார். மோடி வருகையொட்டி சென்னையில் கடந்த 2 நாள்களாக பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது. குறிப்பாக நகர்முழுவதும் 68 சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனசோதனை செய்யப்பட்டு வருகிறது. சந்தேகப்படும்படியான நபர்களிடம் முகவரியை காவல்துறையினர் வாங்குகின்றனர்.
மேலும் இந்த சோதனைசாவடிகளில், 14 சாவடிகள் நகருக்குவெளியே இருந்து வரும் சாலைகளிலும், புறவழி சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தசோதனை சாவடிகளில் போலீஸார் 24 மணி நேரமும் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர்.
நரேந்திரமோடியின் வருகையின் போது, 4 கூடுதல் ஆணையர்கள், 6 இணைஆணையர்கள், 12 துணைஆணையர்கள் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சிநடைபெறும் நூற்றாண்டுவிழா அரங்கு மற்றும் பாஜக அலுவலகம் ஆகியவற்றில் சுமார் 500 போலீஸார் செவ்வாய்க் கிழமை முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.