சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தலில், புதினி, விதிஷா ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற, மபி., முதல்வரும், பாஜக., மூத்த தலைவருமான, சிவ்ராஜ்சிங் சவுகான், விதிஷா தொகுதியின் எம்எல்ஏ., பதவியை, ராஜினாமா செய்ய முடிவுசெய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில், சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தலில், ஆளும்கட்சியான, பாஜக., மீண்டும் வெற்றிபெற்றது. பாஜக.,வின் மூத்த தலைவரான, சிவ்ராஜ்சிங் சவுகான், தொடர்ந்து, மூன்றாவது முறையாக, முதல்வராக பதவியேற்றுள்ளார். சட்ட சபை தேர்தலில், புதினி, விதிஷா ஆகிய இரண்டுதொகுதிகளில், போட்டியிட்டார். இதில், புதினிதொகுதி, சவுகான், நீண்டகாலமாக வெற்றிபெற்று வரும் தொகுதி. இதில், 85 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றார். விதிஷா தொகுதியில், 16 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான், வெற்றிபெற்றார்.
விதி முறைப்படி, இரண்டுதொகுதிகளில் வெற்றிபெற்றவர்கள், புதிய சட்டசபை அமைக்கப்பட்ட, 14 நாட்களுக்குள், ஏதாவது ஒருதொகுதியை ராஜினாமா செய்யவேண்டும். மபி.,யில், புதிதாக வெற்றிபெற்ற எம்எல்ஏ.,க்கள், கடந்தவாரம் பதவியேற்றனர். இதையடுத்து, தான், நீண்டகாலமாக போட்டியிட்டு வரும், புதினி தொகுதியை தக்கவைக்க, சவுகான் முடிவுசெய்துள்ளார். விதிஷா தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமாசெய்ய, திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, விதிஷாதொகுதிக்கு, விரைவில், இடைத்தேர்தல் நடக்கிறது.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.