காங்கிரஸ்சின் மக்கள்விரோத கொள்கைகள் நாட்டை சீரழித்து விட்டன. மோடி பிரதமரானால், அனைத்து விதமான வரிகளை ரத்து செய்ய வேண்டும். வங்கிபரிவர்த்தனை வரிவடிவில் ஒரே வரியாக கொண்டுவர வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று பாஜக பிரதமர் வேட்பாளர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு யோகாகுரு பாபா ராம்தேவ் ஏற்பாடு செய்துள்ளார். இக்கூட்டத்தில் நரேந்திரமோடியுடன் தலைவர் ராஜ்நாத்சிங்கும் கலந்துகொள்கிறார். இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை ராம் தேவ் சந்தித்து கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் மக்கள்விரோத கொள்கைகள் நாட்டை சீரழித்து விட்டன. மோடி பிரதமரானால், அனைத்து விதமான வரிகளை ரத்து செய்ய வேண்டும். வங்கிபரிவர்த்தனை வரி வடிவில் ஒரேவரியாக கொண்டுவர வேண்டும்.
இந்தியாவின் 125 கோடிமக்கள் சார்பாக, நாட்டை ஒரு பொருளாதார சுதந்திரம்பெற்ற நாடாக அறிவிக்க மோடியை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் 1 அல்லது 2 சதவிகித வங்கி பரிவர்த்தனைவரி விதிக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
விலைக் கொள்கைக்கு பதிலாக, வருமானகொள்கை அடிப்படையில் 60 கோடி விவசாயிகளுக்காக ‘தேசிய விவசாய வருமான ஆணையம்’ அமைக்கவும் அறிவிக்கவேண்டும். வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புபணத்தை நாட்டின் சொத்தாக அறிவித்து அதை திரும்ப பெறவேண்டும் என்றார்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.