நான் ஒடிஸா மாநிலத்துக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று விரும்பினால், எனக்கு இங்கிருந்து பா.ஜ.க சார்பில் எம்பி.க்கள் வேண்டும். ஒடிஸாவிலிருந்து தில்லிக்கு நேரடியான இணைப்புவேண்டும். எனக்கு இங்கிருந்து 21 தாமரைகளை மலரச்செய்து அனுப்புங்கள். பிஜு பாபுவை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டுமானால், ஒடிஷாவில் மாற்றம் வரவேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்ப்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரத்தில் பொதுக் கூட்ட மேடையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மேலும் பேசியதாவது; உங்கள முதல்மந்திரியை அவமதிப்பதற்காக நான் ஒரியாவில் பேசவில்லை. நாங்கள் அனைத்து மொழிகளுக்கும் மதிப்புகொடுப்போம். ஒரியா எனக்கு அதிகம்பிடித்த மொழி. ஒடிசாவில் இருந்து அதிக மக்கள் குஜராத்தில் வழ்ந்து வாழ்கின்றனர். ஒரியா சூரத்நகரில் இரண்டாவது மொழியாக உள்ளது. நான் பல ஆண்டுகளாக முதல் மந்திரியாக பணியாற்றி வருகின்றேன். இங்குள்ள மக்கள் குஜராத் வருவதை காணமுடிகிறது.
நாங்கள் 14 வருடங்களில் குஜராத்தின் நிலையை மாற்றியுள்ளோம். அதேசமயம் ஒடிசா அந்த ஆண்டுகளை மக்களை அங்கிருந்து வெளியேற்ற பயன் படுத்தியுள்ளது. ஏன் ஒடிசாவில் உள்ள வாலிபர்கள் தங்கள் பெற்றோர்களை விட்டு வெளியேசெல்ல வேண்டும். ஒடிசாவை நாம் பின் தங்கிய நிலையில் இருந்து முன்னேற்ற வேண்டும். சில்சேரிகள் நெய்பவர்கள் ஏன் சூரத்திற்கு வரவேண்டும்? அவர்கள் ஒடிசாவில் அதனை செய்யமுடியாதா?
மூன்றாவது அணியில் உள்ளவர்கள் யார்? மூன்றாவது அணி என்று ஒன்றாக கைகோர்த்து போட்டோவிற்கு போஸ்கொடுத்து நிற்பார்கள் ஆனால் அவர்களால் சொந்த மாநிலத்தில் தலைகாட்ட முடியுமா? மூன்றாவது அணி என்றுசொல்லும் 11 கட்சிகளும் காங்கிரஸ்க்கு ஆதரவானவை. தேர்தல் என்றதும் 3வது அணி என்ற முக முடியை மாட்டிக் கொள்கின்றன. காங்கிரஸ் நாட்டிற்கு என்ன கொடுத்தது? 60 ஆண்டுகளாக நாட்டை ஒரேகுடும்பம் ஆட்சிசெய்து வருகிறது
சத்தீஷ் காருக்கும், ஒடிசாவிற்கும் எந்த ஒரு அதிகவேறுபாடும் இல்லை. இரண்டு மாநிலங்களிலும் சில வருடங்களுக்கு முன்பாக ஒரேவகையான பிரச்சனை உள்ளது. தற்போது சத்தீஷ்கார் நாட்டின் நல்ல மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் ஒடிசா ஏன் அவ்வாறு மாறவில்லை. ஏன்னென்றால் அங்கு சரியான தலைவரை பெறவில்லை. ராமன் சிங் ஆட்சியில் சத்தீஷ்கார் நல்ல நிலையை பெற்றுள்ளது. முன்பாக சத்தீஷ்காரில் அரிசிகிடையாது ஆனால் தற்போது அந்த மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதிசெய்கிறது. ஆனால் ஒடிசாவில் என்ன நடக்கிறது. மத்திய பிரதேசமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
பாரதீய ஜனதாவை தவிர மற்ற எந்தகட்சிக்கும் நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டது இல்லை. பாஜக ஆளும் மாநிலங்கள் சிறப்பானவளர்ச்சி பெற்று வருகின்றனர். அது போன்ற ஆட்சிமுறையே தற்போது மத்தியில்தேவை. அடுத்த 100 நாட்களில் ஆட்சிமாற்றம் இருக்கும்.
அந்த மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் ஆட்சியின் போது விவசாய துறை வளர்ச்சி 15 சதவீதமாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியின்போது 2-3 சதவீதமாகவே இருந்தது. எனவே நாம் ஒடிசாவை மாற்றுவோம். நான் மாநிலத்திற்கு நல்லதை செய்யவிரும்புகிறேன். நான் உங்களது மாநிலத்தில் இருந்து எம்.பி.களை விரும்புகிறேன். டெல்லி மற்றும் ஒடிசாவுக்கு நேரடியானதொடர்பு தேவை. உங்களது மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் பாரதீய ஜனதாவுக்கே தாருங்கள் என்று கூறினார்.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.