குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொய் பலூன்களை மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால்தான் குஜராத்தில் நடந்த 3 சட்ட சபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது என்று ராகுல் காந்திக்கு நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் நடந்த தேர்தல்பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கூறியதாவது:
நீங்கள் குஜராத் மாதிரியை பலூனாக கருதிக்கொள்ளுங்கள். நான் உங்களை ஒன்றுகேட்க விரும்புகிறேன். நீங்கள் உங்களது தாயார் (சோனியாகாந்தி) சொல்பவற்றில் நம்பிக்கை உள்ளவர் தானே? உங்களது தாயார் தலைவராக உள்ள ராஜீவ் காந்தி அறக்கட்டளையே, குஜராத் முதலிடத்தில் உள்ளதாக கூறியுள்ளது. உங்களது தாயாரின்பேச்சில் நீங்கள் பலூனை பார்க்கவில்லையா? உங்களது தாயாரும் பலூன்களை பறக்கவிட்டு உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பொய்கள் அடங்கிய பலூன்களை 3 தடவையும் (2002, 2007, 2012 சட்டசபை தேர்தல்களின் போது) மக்கள் வெடிக்க செய்துவிட்டனர். நீங்கள், உங்களது கட்சி, 18 முதல்–மந்திரிகள் 2002–ம் ஆண்டு குஜராத்தில் பொய்பலூன்களை பறக்க விட்டனர். ஆனால், உங்களது பொய் பலூன்களை மக்கள் ஏற்கவில்லை. அதன்பிறகு 2007, 2012–ம் ஆண்டுகளிலும் உங்களது பொய்பலூன்களை நம்ப மக்கள் மறுத்துவிட்டனர். குஜராத்தின் வளர்ச்சியை பார்த்து மக்கள் பா.ஜ.க.,வை வெற்றி அடையசெய்தனர்.
குஜராத் மாநிலம் குறித்து குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, நாட்டின் நலனில் ராகுல் காந்தி கவனம் செலுத்தவேண்டும். அவர் எப்போதும் குஜராத் குறித்தே பேசுகிறார். இந்ததேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவது குஜராத் அரசா? குஜராத் முதல்–மந்திரியா? தேர்தல் பிரதமரை தேர்ந்தெடுக்கதான் நடைபெறுகிறது. மத்தியில்தான் ஆட்சி அமைய உள்ளது. இதனால் மத்திய அரசின் சாதனைகள் குறித்து ராகுல் காந்தி ஏன் விவாதிக்கக் கூடாது? கடந்த பத்து ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுசெய்தது என்ன? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
தேர்தலில் ஒருமாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை இலக்க எண்ணில் வெற்றிகிடைக்காது. சில மாநிலங்களில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாது. நாட்டை கொள்ளையடித்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை மக்களிடம் உள்ள இந்த மனோபாவத்தை நான் கண் கூடாக பார்த்து உள்ளேன்.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 6 ஆண்டுகளில் 6½ கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 1¼ கோடி இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ்கட்சி தான் செய்த பணிகள் குறித்தும் எதுவும் சொல்வது இல்லை. விலைவாசி உயர்வை 100 நாட்களுக்குள் கட்டுக்குள் கொண்டுவருவோம் என்று உறுதி அளித்தும் அதை நிறைவேற்றவில்லை. எனவே இறுதியாக ஒரு முறை காங்கிரசுக்கு வழியனுப்புவிழா கொடுக்க வேண்டியது உள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும்கரும்புக்கு தகுந்த விலை கிடைப்பது இல்லை. மேலும் சர்க்கரை ஆலைகளும் மூடப்பட்டு வருகின்றன. போரில் இறக்கும் வீரர்களை காட்டிலும் விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சி பிறகட்சிகளுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்து விட்டது. இதற்குகாரணம், மே மாதம் 16–ந்தேதி ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு எங்கு இருப்போம் என்று அந்த கட்சிக்கு தெரிந்துவிட்டது. மக்கள் ஒருமுறை ஆசி வழங்கி ஆட்சியில் அமர்த்திய பிறகு பணி செய்யாவிட்டால் அந்த இடம்தானே கிடைக்கும். ஏனென்றால் இது மக்கள் ஆட்சி.
காங்கிரஸ் கட்சியின்தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டை. அது தேர்தல் அறிக்கையல்ல. வெறும் ஏமாற்று ஆவணங்கள். வலிமைமிக்க இளைய சமுதாயத்தைகொண்ட இந்தியாவால் எதையும் சாதிக்கமுடியும். உலகில் நமது நாட்டை உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்ல முடியும். இதற்கு லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்குவதே தேவையான ஒன்றாக உள்ளது. சிலர் லஞ்சம் அற்ற நாட்டை உருவாக்க முடியாது என்று கூறுகிறார்கள். அதை நான் உறுதியாக மறுக்கிறேன் என்று நரேந்திர மோடி கூறினார்.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.