ஏழை முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையில் ஒருமாற்றம் வேண்டும்

 ஏழை முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையில் ஒருமாற்றம் வேண்டும். ஒருலட்சம் ரூபாயை மூன்றே ஆண்டுகளில் 300 கோடி ரூபாயாக மாற்றக்கூடிய மாயாஜால நிபுணர்களும் நமது நாட்டில் தான் வசிக்கிறார்கள் என்று உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம்கள், கணிசமாக வசிக்கும் பிரோஷபாத் நகரில் நேற்று நடந்த தேர்தல்பிரசார கூட்டத்தில் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியுள்ளார் .

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது

சீனாவுடன் மத்திய அரசு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டதன் மூலம் பிரோஷபாத்தில் இருந்த வளையல் மற்றும் கண்ணாடி தொழிற்சாலைகளை அழித்து விட்டது. இங்குள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்த வேண்டும். மேலும் புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும்.

ஏழை முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையில் ஒருமாற்றம் வேண்டும். ஒருலட்சம் ரூபாயை மூன்றே ஆண்டு காலத்தில் 300 கோடி ரூபாயாக மாற்றக்கூடிய மாயாஜால நிபுணர்களும் நமது நாட்டில் தான் இருக்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழல் தொடர்பாகவும் மற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும்.

இது போன்ற ஊழலில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் ஆட்சியைதந்து விடக்கூடாது. இதுவரை பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள 232 தொகுதிகளிலும் மக்கள் நல்லதீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். அடுத்து தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளிலும் பா.ஜ.க கணிசமான வெற்றியைபெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்.

ஏனெனில் பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக அலைவீசுகிறது. பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் தவறான தகவல்களை தருகிறது. பெண்களுக்கு எதிராக அதிககுற்றங்கள் நடக்கும் 10 மாநிலங்களில் 7ல் காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கிறது. தந்தையும், மகனும் ஆட்சிநடத்தும் உத்தரபிரதேசத்தில் ஊழல் மலிந்துவிட்டது. குற்றங்களும் அதிகரித்து விட்டன. மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் இது வரை நடைபெறவில்லை. மாநிலத்தில் மின்சாரவசதி இல்லை. சாலைவசதியும் கிடையாது. இதுபோன்ற மக்களை பாதிக்கும் செயல்கள்தான் அன்றாடம் நடந்து வருகின்றன என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...