அரசியலில் களம் இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி அரசியலை சோனியாகாந்தி கையில் எடுத்துள்ளதாகவும், மேலும் காங்கிரஸ் கட்சியானது தீண்டாமை, வெறுப்பு அரசியலை நடத்த தொடங்கி யுள்ளதாகவும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார் .
பிகார் மாநிலம் மோதி ஹரியில் பாஜக வேட்பாளர் ராதா மோகன் சிங்குக்கு ஆதரவுதிரட்டி பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி மேலும் பேசியதாவது:
வாக்குவங்கி அரசியலை ஆரம்பித்த அதே நபர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) இப்போது தீண்டாமை அரசியலை நடத்துகிறார்கள். இந்ததேர்தல் நிகழ்வு முழுவதிலும் நாங்கள் வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட அரசியலிலிருந்து விலகவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியோ உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி அரசியல் நடத்துகிறார்.
காங்கிரஸ் தலைவரான சோனியாகாந்தி, உயர் குலத்தோர், தாழ்ந்த குலத்தோர் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது அழகல்ல. இழந்த அரசியல்களத்தை மீட்க காங்கிரஸ் போராடுகிறது. தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பது தெரிந்துவிட்டதால் சோனியாகாந்தி கலக்கத்தில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஜாதி மற்றும் வகுப்புவாத அரசியல் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டதால் சோனியா தடுமாறி நிற்கிறார். என்னை சந்தித்தார் என்பதற்காக கேரள அமைச்சர் ஒருவரிடம் மாநில அரசு விளக்கம் கேட்டுள்ளது.
பின்னணி பாடகி லதாமங்கேஷ்கர் என்னை சந்தித்து பாராட்டியதால் அவருக்கு வழங்கப்பட்ட பாரதரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இளைஞர்களை மோசடி செய்கிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி.
தங்கள் எதிர் காலம் பாழாவதை இளைஞர்கள் தடுத்துக்கொள்ள வேண்டும்.அம்மா, மகனின் ஆட்சி நாட்டை சீரழித்துவிட்டது என்றார் மோடி.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.