பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரத்தின் போது, ”நான் பிரதமரானால் கிரிமினல் குற்றவழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகள் மீதான விசாரணையை ஓராண்டுக்குள் விரைந்துமுடிக்க நடவடிக்கை எடுப்பேன்” என கூறி இருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மோடி நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கிரிமினல் மற்றும் ஊழல்வழக்குகளில் சிக்கியுள்ள எமபி.க்கள் மீதான விசாரணையை தீவிரப்படுத்தும்படி அவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய சட்டஅமைச்சர் ரவிசங்கர்பிரசாத் இருவருக்கும் மோடி உத்தரவிட்டுள்ளார். எம்பி.க்கள் மீதான வழக்கு விசாரணையை ஓராண்டுக்குள் முடிப்பதற்கு ஏதுவாக புதியவரைவு திட்டம் ஒன்றை தயாரிக்கும் படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எம்பி.க்கள் மீது தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வுசெய்து, அவை மீது விரைவில் தீர்ப்புவழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஜனநாயக சீர்திருத்தத் துக்கான கழகம் சமீபத்தில் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஆய்வு நடத்தி இருந்தது. அதில் 186 எம்.பி.க்கள் மீது பல்வேறுபிரிவுகளில் கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அரசியல் தலைவர்கள், எம்பி.க்கள் மீதான வழக்கு விசாரணைகளை தீவிரப்படுத்துவதோடு அவற்றை அந்தந்தமாநில விசாரணை குழுக்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆவணங்கள் போதுமானதாக இல்லை அல்லது சாட்சிகளை தயார்படுத்த முடியவில்லை என்பது போன்ற காரணங்களைகூறி வழக்கு விசாரணை தாமதம் ஆகாமல் இருப்பதை உறுதிபடுத்தவும் நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1) மற்றும் 8(2) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஓராண்டுக்கு மேல் நிலுவையில் வைத்திருக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் நடக்கும் விசாரணைகள்தான் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவிக்கு வேட்டு வைக்கும் என்று கூறப்படுகிறது.
அரசியல்வாதிகள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அது பலருக்கும் நெருக்கடியாக அமையும். நல்லாட்சி நடப்பதை உறுதிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள தீவிரமாக உள்ளார் . இதன் மூலம் ஓராண்டுக்குள் அரசியல் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் குற்றவழக்குகளில் தீர்வு காணப்பட்டால், பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகள் பரிசுத்தமான உறுப்பினர்களை கொண்ட இடமாகமாறும்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.