விண்ணப்பங்கள் அனுப்பும் போது, சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும்முறை ரத்தாகிறது. இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்றதுமுதல், மக்கள் பலன் அடைகிறவிதத்தில் அரசு நடைமுறை சிக்கலை களைந்து எளிமைப்படுத்துவதில் கடும் முயற்ச்சியை மேற்கொண்டு வருகிறார். .இதன் ஒரு அங்கமாக பொதுமக்கள் பலன் அடையத்தக்க விதத்தில் அரசு நடை முறை காரியங்களில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக விவாதித்தார்.
அந்தவகையில், தற்போது மாணவர்கள், பொது மக்கள் மத்திய, மாநில அரசுகளில், அரசு நிறுவனங்களில் வேலைபெறவும், கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கும், வேலைவாய்ப்பு தேர்வுகள் எழுதுவதற்கும் விண்ணப்பிக்கிற போது, அத்துடன் கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றின் ஜெராக்ஸ் நகல்களை ‘கெஜட்டட் ஆபிசர்ஸ்’ என்று அழைக்கப்படுகிற அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகளின் சான்றளிப்பு பெற்று இணைக்கிற நடைமுறை உள்ளது.
இப்படி சான்றளிப்பு பெறுவதற்கு அரசு அதிகாரிகளை தேடிஅலைவதில் பொது மக்களுக்கு நேரமும், பயணச் செலவும் விரையமாகிறது. அதிகாரிகளுக்கு நேரம் விரையமாகிறது. இந்த சான்றளிப்பு முறையை முடிவுக்கு கொண்டுவந்து, நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்பி அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.
அந்தவகையில் இனி அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெற்று பயன்படுத்துவதற்கு பதிலாக விண்ணப்ப தாரர்களே தங்களது சான்றிதழ் நகல்களை சுயசான்றளிப்பு செய்யும் நடைமுறை வருகிறது. நேர்முகத் தேர்வு போன்ற கடைசி கட்ட நடவடிக்கையின் போது, அசல் சான்றிதழை கொண்டு வரச்செய்து உறுதி செய்துகொள்ளப்படும். இந்த நடைமுறையை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
இதற்கான வழி வகைகளை செய்யுமாறு மத்திய அரசின் அனைத்து துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு, யூனியன் பிரதேசங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல்களை பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.