ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நாட்டுமக்கள் பெருந்தன்மையுடன் நிதியுதவி அளிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஜம்மு – காஷ்மீரில் எதிர்பாராத அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட்டு, அம் மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நிறைய எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, பலர் தங்கள் இருப்பிடத்தை இழந்துள்ளனர். கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்களும் உள்கட்டமைப்புகளும் அழிந்துபோயுள்ளன. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் வாழும் நமது சகோதரர்களுக்கு இத்தகைய நெருக்கடிநிலையில், அவர்கள் வாழ்க்கை மீண்டும் புனரமைக்கப்பட நமது உதவி பெரிதும் தேவைப் படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட நமது சகோதரர், சகோதரிகளுக்கு இத்தகைய நெருக்கடி தருணத்தில் தோள்கொடுப்பது நமது கடமையாகும்.
ஆகவே பிரதம மந்திரி தேசியநிவாரண நிதிக்கு நாட்டுமக்கள் அனைவரும் பெருந்தன்மையுடன் நிதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் மோடி. இதற்கான தொகையை காசோலை, டிராஃப்ட் அல்லது ரொக்கம் ஆகிய முறைகளில் அனுப்பலாம். பிரதமர் அலுவலக இணைய தளம் மூலமும் நிதியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் இதற்காக டிராஃப்ட் எடுத்தால் எந்த விதக்கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக பணியாளர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை ஜம்முகாஷ்மீர் நிவாரணத்திற்காக அளித்ததையடுத்து பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.