இளைய தலை முறையினரால் மட்டுமே உலகில் மாற்றங்களை கொண்டுவர முடியும்

 "சாதிப்போம்' என்ற எண்ணம் படைத்துள்ள இன்றைய இளைய தலை முறையினரால் மட்டுமே உலகில் மாற்றங்களை கொண்டுவர முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கின் சென்ட்ரல் பூங்கா பகுதியில் சனிக் கிழமை நடைபெற்ற "உலகளாவிய குடிமக்கள் திருவிழா'வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். ஏராளமான அமெரிக்கர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்பட சுமார் 60,000 பேர் திரளாக கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், அமெரிக்காவின் பிரபல "ராக்' இசைக் கலைஞர்கள் ஜேய் ஸீ, பியான்ஸ் உள்ளிட்டோர் மெல்லிசைப் பாடல்களைப்பாடி கூட்டத்தினரை மகிழ்வித்தனர்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளரும், பிரபல ஆஸ்திரேலிய நடிகருமான ஹியூ ஜேக் மேன், பிரதமர் மோடியை அறிமுகம் செய்துவைத்தபோது, ""எளிமையான "தேநீர் விற்பனையாளராக' இருந்து இந்தியாவின் பிரதமராக உயர்ந்தவர் மோடி'' என்று குறிப்பிட்ட போது கூட்டத்தினர் பலத்த கரகோஷத்தை எழுப்பிப் பாராட்டினர்.

இதில் உற்சாகமடைந்த மோடி, கூட்டத்தினரை பார்த்து கைகுவித்து இங்கு கூடியிருப் போருக்கும், தொலைக்காட்சி, இணையத்தின் மூலம் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் "நமஸ்தே' என்றபோதும் பலத்தகரகோஷம் எழுந்தது. இதையடுத்து நிகழ்ச்சியில் மோடி ஆற்றிய உரை:

இங்கு குழுமியிருப் போரிடம் நிலவும் தன்னம்பிக்கையை என்னால் உணரமுடிகிறது. எதிர்கால சந்ததியினரான உங்களது செயல்கள் தான் நாளைய வரலாற்றை தீர்மானிக்கும். உங்களுடன் இணைந்துள்ளதால் எதிர் காலத்தைப் பற்றிய எனது நம்பிக்கை வலுப்பெறுகிறது. உங்களையும், உங்களது தேசங்களையும், குடும்பத்தார், தோழர்களையும் வணங்குவதில் நான் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்.

முதியவர்களின் அனுபவங்களை கொண்டு தான் உலகில் மாற்றங்கள் உருவாகும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால், என்னை பொருத்த வரை, இளைய தலைமுறையினரின் சித்தாந்தங்கள், புதுமைகள், ஆற்றல், சாதிப்போம் என்ற உறுதி ஆகியவை அதைக் காட்டிலும் சக்தி படைத்தவை என்பேன்.

அதேபோல், இந்தியாவில் உள்ள 80 கோடி இளைஞர்களின் சக்தி கைகோத்தால், அது தேசத்தில் மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துவிடும்.

உலகளாவிய மாற்றத்தை கொண்டு வருவதற்காக இங்கு திரண்டிருக்கும் இயக்கத்தினருடன், இந்திய இளைஞர்களும் தங்களை இணைத்துக்கொள்ள முன்வருவார்கள் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...