தூய்மை இந்தியா' என்னும் திட்டத்தை மகாத்மா காந்தி பிறந்த நாளன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கிவைத்தார்.
டெல்லி வால்மீகி பஸ்தியில் பிரதமர் மோடி இந்த 'தூய்மை இந்தியா' திட்டத்தைத் தொடங்கிவைத்தார். காந்தி தங்கிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து நரேந்திர மோடி பேசுகையில், "தூய்மையான இந்தியா என்ற காந்திஜியின் கனவு இது வரை நிறை வேறவில்லை. தற்போதைய தூய்மை இந்தியா திட்டத்தை காந்திஜி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவை தூய்மையாக்க முயற்சிசெய்யும் அனைவருக்கும் நன்றி. இந்த திட்டத்தால் மத்திய அரசு ஆதாயம் அடைய முயற்சி செய்ய வில்லை.
குப்பைகளை பார்க்கும் போது அதைபடம் பிடித்து பதிவேற்றம் செய்யுங்கள். அதைபோல் தூய்மைபடுத்திய பிறகு அந்த இடத்தை படம் பிடித்து பதிவேற்றம் செய்யுங்கள்.
ஒவ்வொருவரும் வாரத்திற்கு இரண்டுமுறை இந்தியாவை தூய்மை படுத்த முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு அரசும் இந்த இயக்கத்தை செயல்படுத்த வேண்டும். செவ்வாயைதொட்ட நாம் ஏன் இந்தியாவையும் தூய்மை படுத்தமுடியாது?" இவ்வாறு மோடி பேசினார்.
நரேந்திர மோடி துடைப்பத்தை எடுத்து சுத்தம்செய்யும் பணியில் ஈடுபட்டார். மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
'தூய்மை இந்தியா' திட்டத்தில் நாடுமுழுவதும் உள்ள 31 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். அரசு ஊழியர்கள் அனைவரும் தூய்மையை பேணுவதற்கான உறுதிமொழியை ஏற்றனர். விழிப் புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளோடு, தூய்மைப்பணிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள், பணியிடங்கள், சாலைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் நீர் நிலையங்கள் என அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்துவதன் மூலம் திட்டத்தை வெற்றிபெற செய்ய முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தூய்மை இந்தியாவை உருவாக்குவது பிரதமர் நரேந்திர மோடியின் லட்சிய கனவாகும் , இந்தியா தூயமையான நாடாக இருந்தால் உலகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகளின் வரிசையில் முதல் 50 இடங்களை பிடித்துவிட முடியும் என்றும் இதனால் இந்தியாவை எடுத்து காட்டாக கூறும் நாடாகவும் மாற்றமுடியும் என்று கருதுகிறார்.
சுத்தம், சுகாதாரம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் பொருளாதாரத்தையும் வளர்ச்சி பெறச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 'தூய்மை இந்தியா' என்னும் திட்டத்தை தொடங்க அவர் முடிவுசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.