இந்தியாவில் 6 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கு அன்னிய நிறுவனங்கள் காத்திருக்கின்றன. இந்த முதலீடுகளை பெறுவதற்கு ஆர்வத்துடன் முந்திக்கொள்ளும் மாநிலங்கள் கணிசமான பங்கை தட்டிச்செல்லலாம்'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:
ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச்சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள் சுமார் ரூ.6,00,000 கோடி அளவுக்கு இந்தியாவில் முதலீடுசெய்வதற்கு தயாராக உள்ளன. அருமையான இந்தவாய்ப்பை ஆர்வத்துடன் முந்திக்கொண்டு பெற்றுச்செல்லும் மாநிலங்களுக்குக் கணிசமான முதலீடுகள் கிடைக்கும்.
இந்தியாவில் உற்பத்தி' திட்டம் மாபெரும் பலனைத் தரக்கூடிய ஒன்றாகும். இந்தத் திட்டத்தின்கீழ், இந்தியாவில் முதலீடுசெய்வதற்கு ஆர்வம் காட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவை தங்களது தயாரிப்புகளுக்கான சந்தையாகப் பார்க்காமல், உலகின் உற்பத்திமையமாக்க முயலவேண்டும். இதன்மூலம், இந்திய மக்களின் வாங்கும் திறனை பன் மடங்காகப் பெருக்க வேண்டும். இந்தியா வளமையாக மாறா விட்டால், அதன் வாங்கும்திறன் அதிகரிக்காது. அந்தத்திறன் அதிகரிக்கா விட்டால், இந்தியாவை மிகப் பெரிய சந்தையாக உருப்பெறச் செய்யும் எண்ணம் தொலைதூரக் கனவாக ஆகிவிடும்.
வேளாண்மை, உற்பத்தி, சேவை உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கச்செய்து அதன் மூலம் கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதே மத்திய அரசின் நோக்கமாகும். அரசு- தனியார்கூட்டு திட்டங்களில் அதிகளவில் முதலீடுகளை செய்வதற்கு வர்த்தக நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களை பயன் படுத்திக் கொள்வதில் மத்திய பிரதேச மாநில அரசு முந்தி கொண்டுள்ளது. நாட்டிலேயே முதல் மாநிலமாக, பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருள்களை தயாரிக்கும் 2 தொழிற் சாலைகளை ஜபல்பூர், குவாலியர் ஆகிய நகரங்களில் மத்திய பிரதேசம் அமைக்க உள்ளது.
இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை நனவாக்கும் வகையில் 2 மின்னணு தொழிற்பேட்டைகள் இந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மக்கள் நிதி திட்டத்தின் கீழ், சுமார் 36 லட்சம்பேர் வங்கிக் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.
ஒட்டு மொத்த மாநிலங்களும் முன்னேறினால்தான் இந்ததேசம் முன்னேறும். எனவே, அரசியல், கொள்கை முரண்பாடுகளைக் களைந்து விட்டு மத்திய அரசோடு மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்றார் மோடி.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.