இளைஞர்கள் வன் முறை மற்றும் துப்பாக்கி கலாச் சாரத்தை கைவிட்டுவிட்டு தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நக்சலைட் இயக்கத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
.
மகாராஷ்ட்ராவில் நக்சலைட்களால் பாதிக்கப் பட்டுள்ள மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். சண்டிப்பூர் மாவட்டத்தில் பிரமபுரி என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவரை உரையாற்றிய போது, தீவிரவாதம் யாருக்கும் பயன் தராது.
வன்முறையில் ஈடுபட்டுள்ள எல்லா இளைஞர் களையும் நான் கேட்டுக்கொள்கிறேன், வன்முறையை அறவே கைவிடுங்கள். வன்முறை நல்ல தல்ல. உங்கள் தோள்களில் இருக்கும் துப்பாக்கிகளை தூக்கி எறிந்துவிட்டு கலப்பைகளை ஏந்துங்கள். அது உங்கள் வாழ்க்கையை நிச்சயம் மாற்றிக்காட்டும் .
அண்டை மாநிலமான சத்தீஸ்கரை போல் இந்த மாநிலத்திலும் விவசாயிகள் முன்னேற்றம் அடையவேண்டும். அதற்கு பிஜேபி வெற்றிபெறுவது அவசியம் . ஒரு விவசாயிக்கு போதியதண்ணீர் கிடைத்தால் அவரால் தங்கத்தை உற்பத்திசெய்ய முடியும் , பிஜேபிக்கு பெரும்பான்மை பலம்கிடைத்தால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி விவசாயிகளுக்கு போதியளவு தண்ணீர் கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
மகாராஷ்ட்ராவில் எங்களுக்கு ஒருவாய்ப்பு கொடுங்கள். இந்த மாநிலத்தின் முகத்தை மாற்றி காட்டுகிறோம் என்றும் அவர் கூறினார்.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.