தொழிலாளர்கள் பிரச்சினையை தொழிலாளார்களின் பார்வையில் இருந்து பார்க்கவேண்டும்

 தொழிலாளர்கள் பிரச்சினையை தொழிலாளார்களின் பார்வையில் இருந்து தான் பார்க்கவேண்டுமே தவிர நிறுவனத்தின் கண்ணோட்டத்தில் பார்க்ககூடாது நாம் நம்முடைய பார்வையை மாற்றிக்கொண்டு, அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாய ஜெயந்தி திட்டத்தின் தொடக்கவிழாவில் இதனை அவர் தெரிவித்தார். மேலும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆறு புதிய திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

இத்திட்டங்களைத் தொடக்கிவைத்து மோடி மேலும் பேசியதாவது:

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் "குறைந்த பட்ச அரசு; அதிகபட்ச நிர்வாகம்' என்ற எனது அரசின் அணுகு முறைக்கான உதாரணமாகும். அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கைத் தடுத்து நிறுத்த, தொழிலாளர்களின் விவகாரங்கள் முறையாக கையளாப்படுகின்றனவா என்பதை ஆய்வுசெய்வதற்கு வெளிப்படையான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அரசு அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு முடிவுகட்டப்பட்டு, தொழிலகங்களின் திறனும், தரமும் உயரவழிவகை செய்யப்படும். தற்போது ஆய்வுக்கு உள்படுத்தப்படும் தொழிலக பிரிவுகள், குறிப்பாக எந்தநோக்கமும் இன்றித் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், புதிய திட்டமானது, கண்டிப்பாக சோதனை செய்யவேண்டிய பட்டியலில் தீவிரமான விஷயங்களைக் கொண்டிருக்கும்.

என்னென்ன விஷயங்களை ஆய்வுக்கு உள்படுத்தவேண்டும் என்ற தகவல் அடங்கிய, கணினி மூலம் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பட்டியல் விநியோகிக்கப்படும்.

இதுதவிர, புகார்களின் அடிப்படையிலான ஆய்வும் உறுதிசெய்யப்படும். மேலும், அவசரக்கால ஆய்வுப்பட்டியல் ஒன்றும் உருவாக்கப்படும்.

தொழிற்சாலை உரிமையாளர்கள் நிரப்பிக்கொடுக்க வேண்டிய 16 மனுக்களுக்குப் பதிலாக ஒரே ஒருமனுவை நிரப்பினால் போதும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம். அந்த மனு இணையதளத்தில் கிடைக்கும். இனி, எந்தத் தொழிற்சாலைக்கு எந்த ஆய்வாளர் ஆய்வுக்குச்செல்ல வேண்டும் என்பதை கணினி மூலமான குலுக்கல் தீர்மானிக்கும். ஆய்வுமுடிந்த பிறகு சம்பந்தப்பட்ட ஆய்வாளர் தனது அறிக்கையை இணைய தளத்தில் 72 மணி நேரத்துக்குள் பதிவேற்ற வேண்டும்.

வர்த்தகம், தொழில் செய்வதற்கான நடை முறைகளை எளிதாக்குவது அரசின் பொறுப்பாகும். "இந்தியாவில் தயாரிப்போம்' என்ற திட்டத்தை வெற்றிகரமாக ஆக்குவதற்கு தொழில், வர்த்தக நடைமுறைகளை எளிதாக்குவது மிகவும் அவசியமாகும் என்றார் பிரதமர் மோடி.

இந்த விழாவின்போது, நாடுமுழுவதும் உள்ள 4.2 லட்சம் ஐடிஐ மாணவர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, கைப்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பி பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். இந்த மாணவர்கள் மட்டுமன்றி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் இணைந்துள்ள ஒரு கோடி தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலனுக்காக தொடங்கப்பட்டுள்ள இணையதளம் குறித்து குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதே குறுஞ்செய்திகள் 6.50 லட்சம் அமைப்புகள், நிறுவனங்கள், 1,800 தொழிலக ஆய்வாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

திறன் ஊக்குவிப்பு திட்டம்: "புரோத் சாஹன் யோஜனா' என்ற பெயரிலான பயிற்சி மாணவர்களின் திறன் ஊக்குவிப்பு திட்டத்தையும் பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். இது குறித்து அவர் பேசியதாவது: உலகிற்கு மனித ஆற்றலை வழங்குவதற்கான மிகப் பெரிய வளம் நம் நாட்டில் உள்ளது. தற்போது, நாட்டில் 2.82 லட்சம் பயிற்சி மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர்களின் பயிற்சித் திட்டத்தை மறு சீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்புக்கணக்குகளில் ரூ.27,000 கோடி உரிமை கோரப்படாமல் கிடக்கிறது. அதன் உரிமையாளர்களுக்கு இத்தொகையை திருப்பி அளிக்கவேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருக்கிறேன். இந்த பணமானது ஏழைகளுக்குச் சொந்தமானது.

அரசானது நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயல்படுகிறதே தவிர, சந்தேகத்தின் அடிப்படையில் அல்ல. எனவே, மாணவர்கள் சுயச்சான்றளிப்பு ஆவணங்களை அளிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. முன்பு, அதிகாரிகளின் கையொப்பத்தைப் பெறுவதற்காக மாணவர்கள் மிகவும் அலைய வேண்டியிருந்தது. அந்த முறையை தற்போது நீக்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பற்ற, ஏதோ ஒருபாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற ஒரு பட்டதாரி, சமூகத்தால் மதிக்கப்படுவதும், ஐ.டி.ஐ. தொழில்பயிற்சி நிலையங்களில் பயின்றோர் மதிக்கப்படாததும் முரண்பாடாக இருக்கிறது. நாம் தொழிலாளர்களை மரியாதைக் குரியவர்களாகக் கருதுவதில்லை. இந்நிலை மாறவேண்டும். ஷிரம யோகியானவர் (உழைப்பாளர்), ராஷ்டிர யோகியாகவும் (நாட்டுக்கு உழைப்பவர்), ராஷ்டிர நிர்மாதாவாகவும் (தேசத்தைக் கட்டமைப்பவர்) மாறுவதை கருணையுடன் கூடிய அணுகு முறை உறுதிப்படுத்தும்.

தொழிலாளர்களின் பிரச்னைகளை புரிந்துகொள்வது அவசியம்: தொழிலாளர்களின் பிரச்னைகளை அவர்களது கோணத்தில் இருந்து பார்வையிட்டு புரிந்துகொள்வது அவசியமாகும். அப்போதுதான் அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கமுடியும். பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்களை தொடங்கியுள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இவை தொழிலாளர்கள் மட்டுமன்றி, வேலை வாய்ப்பு அளிப்போரின் நலன்களையும் காக்கும் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...