"சீன தயாரிப்புகளான ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தாதீர்கள்" என்று இந்திய விமானப்படை அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. ஏனெனில், சீன தயாரிப்பான ஸ்மார்ட் போன்கள் மூலம் சீனா வேவு பார்க்கிறது. இதை உறுதிப்படுத்தும் பல சான்றுகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
சீன தயாரிப்பான ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதன் மூலம், நாம் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள், சீனத் தலைநகரான பெய்ஜிங்குக்குச் சென்றுவிடுகின்றன. இது குறித்து ஜீ-நியூஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
'ஜியாவோமி' என்பதுதான் சீனாவில் முதலிடத்தில் உள்ள மொபைல் போன் நிறுவனம். இதற்கு சைனீஸ் ஆப்பிள் என்ற செல்லப்பெயரும் உண்டு. இந்நிறுவனம் ஜியாவோமி ரெட்மி ஐஎஸ், ஜியாவோமி எம்ஐ3, ஆகிய ஸ்மார்ட் போன்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை ஆன்லைன் ஷாப்பிங் மூலமாகவே பெற முடியும். பிலிப்கார்ட் போன்ற போர்ட்டல்களில் முன்கூட்டியே பதிவு செய்தால் தான், இந்த ஸ்மார்ட் போன்களை வாங்க முடியும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பிறகே, இந்த ஸ்மார்ட் போன்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன.
ஜியாவோமி ரெட்மி, ஐஎஸ் ஸ்மார்ட்போனில் அதை வைத்திருப்பவரின் பெயர் மற்றும் பல்வேறு நுண்ணிய தவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர் மேகொள்ளும் அனைத்து தகவல் பரிமாற்றங்களும், பெய்ஜிங்குக்குச் சென்று விடுகின்றன என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. முகவரிகள் வேவு பார்க்கப்பட்டு வருகின்றன என்பதை உறுதிப்படுத்த வலுவான சான்றுகள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே தைவான் அரசு இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாகக் கூறியுள்ளது. சைபர் செக்யூரிட்டி அபாயம் குறித்து அது எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மூன்று மாதங்களுக்குள் தீர்க்கமான முடிவெடுக்க முடியும் என்று செப்டம்பர் மாத இறுதியில் தைவான் அரசு குறிப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் ஜியாவோமி நிறுவனம் மறுத்துள்ளது.
அமரிக்கா சார்புடைய நிறுவனகள் வேவு பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டை சீனா ஏற்கனவே சுமத்தியுள்ளது. இன்று அதே குற்றச்சாட்டுக்கு சீனா ஆளாகியுள்ளது. கூகுள் மேப் சேவையை சீனா தடை செய்துள்ளது. அமெரிக்கா, தரவுகள் அனைத்தையும் திருடுகிறது, எல்லா பரிமாற்றங்களையும் வேவு பார்க்கிறது என்ற அடிப்படையில்தான் சீனா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் தன் விஷயத்தில் இதிலிருந்து சீனா மாறுபடவில்லை. இந்தியாவை சீனா வேவு பார்த்து வருகிறது.
சீனாவுடன் சேர்ந்து சில இஸ்லாமிய நாடுகளும் இதர நாடுகளை உளவு பார்ப்பதற்காகத் தெரிகிறது. ஏற்கனவே வேவு பார்த்த 5 நாடுகளுடன் டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகியவை புதிதாகச் சேர்ந்துள்ளன. அமரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஷ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவை கூட்டாகச் சேர்ந்து ரஷ்யாவை உளவு பார்த்தன.
அமெரிக்கா தலைமையிலான நாடுகளுக்கு எதிராக இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஒருங்கிணைந்தன. இதில் சீனாவும் தன்னை இணைத்துக் கொள்ள முன்வந்தது. உலகிலேயே சர்வ வல்லமை மிக்க முதல் நாடாக உருவாகவேண்டும் என்ற அடிப்படையில் 'சைபர் உளவு' பார்ப்பதை சீனா விரிவாக்கி வருகிறது.
சமீபத்தில் பாதுகாப்பு சார்ந்த தகவல்கள் தொடர்பாக ரஷ்யாவுடன் சீனா ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. 'ரஷ்யா டுடே' என்ற இணையதளத்திலும் ரஷ்ய செய்திப் பத்திரிக்கையான 'கொம்மர் சாண்டி' லும் இதுபற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த மாதம் சீனாவுக்குச் சென்றபோது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. "சீனாவும் ரஷ்யாவும் கூட்டாகச் சேர்ந்து சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்பதுதான் இதன் சாராம்சம்.
அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ., சமீபத்தில் 5 சீன ராணுவ அதிகாரிகளை சைபர் உளவு விவகாரம் தொடர்பாக கருப்பு பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுத்தது. இந்தியாவும் ஜப்பானும் இணக்கமாக இருப்பது சீனாவுக்கு உறுத்தலாக உள்ளது. இந்தியாவில் ஸ்திரத்தன்மை நிலவக்கூடாது என்பது சீனாவின் எண்ணமாகும். இதற்காக, மாவோயிஸ்டுகள், பிரிவினைவாதிகள் போன்றோரை சீனா ஊக்கிவித்து வருகிறது. இப்படிப்பட்ட தேச விரோத சக்திகளுக்கு எல்லா உதவிகளையும் வழங்கி வருகிது.
எனவே, நம் மாட்டின் இறையாண்மைக்கும் ஸ்திரத்தன்மைக்கும் ஊறுவிளைவிக்க சகல வழிகளிலும் முயற்சி செய்யும். சீனாவின் ஸ்மார்ட் போன்களை தேசபக்தி உடைய யாரும் வாங்கக் கூடாது.
நன்றி : விஜய பாரதம்
– தேவாசீஷ் ஐயர்
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.