அம்பேத்கர் தங்கியிருந்த வீட்டை ரூ.35 கோடி விலைகொடுத்து மராட்டிய அரசு வாங்குகிறது

 லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த வீட்டை ரூ.35 கோடி விலைகொடுத்து மராட்டிய அரசு வாங்குகிறது. மேலும் அந்த வீட்டை அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14–ந்தேதி திறந்து வைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது

சட்ட மேதை அம்பேத்கர் இங்கிலாந்து தலை நகர் லண்டன் நகரில் கல்வி பயின்றபோது, அங்குள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தார். அந்தவீடு தற்போது விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மராட்டியத்தில் காங்கிரஸ்–தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் கடைசி கட்டத்தில் முதல்மந்திரியாக இருந்த பிரிதிவி ராஜ் சவான் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் எழுதி, லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை விலைகொடுத்து வாங்கி அரசுக்கு சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதே போன்று சமீபத்தில் மும்பை பா.ஜ.க தலைவர் ஆஷிஷ் ஷேலார் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லிக்கு கடிதம் எழுதி, இந்த பிரச்சினையில் பிரதமர் நரேந்திரமோடி தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மராட்டிய மக்களுக்கும், அம்பேத்கரின் வழிநடப்பவர்களுக்கும் உணர்ச்சிப்பூர்வ பிரச்சினை என்பதால் அந்த வீட்டை அரசு வசப்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் அவர் கடிதத்தில் கூறியிருந்தார்.

இதற்கிடையே மராட்டிய கல்வி மந்திரி வினோத் தாவ்டே லண்டன் சென்றார். அங்கு அவர் அம்பேத்கர் தங்கியிருந்த வீட்டை மராட்டிய அரசுக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்தபடி சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகருக்கு சென்றிருக்கும் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிசை தொடர்பு கொண்டு, அம்பேத்கார் தங்கியிருந்த லண்டன் வீடுவிவகாரம் குறித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து அந்த வீட்டை மராட்டிய அரசே விலைகொடுத்து வாங்க முடிவு செய்யப்பட்டது. 2 ஆயிரத்து 50 சதுரஅடி பரப்பில் 3 மாடிகளை கொண்ட அந்தவீட்டை ரூ.35 கோடி விலை கொடுத்து வாங்கவும் முதல்–மந்திரி ஒப்புதல் அளித்தார். இதனால் அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த வீடு மராட்டிய அரசுக்கு சொந்தமாக உள்ளது.

மேலும் அம்பேத்கரின் பிறந்தநாளான வருகிற ஏப்ரல் 14–ந் தேதி அந்த வீட்டை பொது மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மந்திரி வினோத் தாவ்டே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்தமுடிவை பாரிப் பகுஜன் மகா சங்க் தலைவரும், அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் வரவேற்றுள்ளார். ''இது மாநில அரசின் சிறப்பு மிக்க முடிவு. இதற்காக மராட்டிய முதல்–மந்திரிக்கு நன்றி தெரிவிக்கிறேன்'' என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...