மத்திய அரசின் செயல் பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய நரேந்திர மோடி, "நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவகாரத்தில் மத்திய அரசின் செயல் பாடுகளைச் சரியான முறையில் பாஜக மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு புரியவைப்பதில் நாம் தவறிவிட்டோம். எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' .
இதைத்தொடர்ந்து, மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை வீரேந்திரசிங் பேசுகையில், "விவசாயிகளுக்கு எதிராக நிலம் கையகப்படுத்துதல் மசோதா இருப்பதாக எதிர்க் கட்சிகள் குறைகூறி வருகின்றன. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறை வேறியவுடன் அதன் சிறப்பம்சங்களை மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கவேண்டும்' என்றார். இதை கேட்ட பிரதமர் மோடி, "பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி மற்ற கட்சிகளைச்சேர்ந்த உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப்பேசும் போதும் அவர்களுக்கு மத்திய அரசின் செயல்பாடுகளை விளக்கிக்கூற முதலில் முயற்சி செய்யுங்கள். நாடாளுமன்றத்தில் மக்கள் நலப் பிரச்னைகளை விவாதிக்கும் முன்பு, அவற்றைப்பற்றி விவாதிக்கும் திறனை பாஜக உறுப்பினர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.