பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் , மூத்த தலைவருமான இல.கணேசன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீர்பாசன பிரச்சினை இருமாநில மக்களின் பிரச்சினையாகும். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்ற கழகமும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும் ஆண்டது. அப்போது இருமாநில அரசுகளையும் அழைத்து காவிரி நீர் பிரச்சினைகள் குறித்து பேசினார்.
அதே போல் தற்போது இந்தபிரச்சினை குறித்து பிரதமர் மோடி இருமாநில அரசுகளையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காண்பார். பாஜக. அரசு எப்போதுமே விவசாயிகளுக்கு ஆதரவாகத் தான் செயல்படும்.
காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பதே . இந்த நதிநீர் இணைப்பை காங்கிரஸ் ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு விட்டது. தற்போது பாஜக. அரசு தென்னக நதிகளை இணைப்பதற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தமானது . கச்சத்தீவை இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு தாரை வார்த்தார். அப்போதே வாஜ்பாய் எதிர்த்து குரல்கொடுத்தார். பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மீனவர்கள் பிரச்சினை குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது இருநாட்டு பிரச்சினை ஆகும். இதில் மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வகைப்படுத்த வேண்டும்.
இதனை மீனவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டாலே இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைத்து விடும். வேதாரண்யம் பகுதியில் மகாத்மாகாந்தி உப்பு சத்தியாகிரகம் செய்ததால் வரலாற்று சிறப்புமிக்க இடமாக உள்ளது. தற்போது இங்குள்ள உப்பு உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்திசெய்யும் உப்பை கொண்டுசெல்ல சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அவதிப்படுகின்றனர்.
எனவே வேதாரண்யம் திருத்துறைப் பூண்டிக்கு ரெயில் போக்கு வரத்து வசதி ஏற்படுத்திதர ரெயில்வே அமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளேன் என்று அவர் கூறினார்.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.