ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் ஒரே ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. எனினும், இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்களா? என்பது தொடர்பாக நிச்சயமான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
நாளை மாலை நியூயார்க் நகரை வந்தடையும் பிரதமர் நரேந்திரமோடி, இங்குள்ள வால்டார்ப் அஸ்டோரியா ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி நியூயார்க் நகரை வந்த டையும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் இதே ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டங்களில் பங்கேற்க வருகைதந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியும் இங்குள்ள நியூயார்க் பேலஸ் ஓட்டலில் தங்கியிருந்தனர்.
இந்த முறை, நரேந்திர மோடியும், நவாஸ் ஷெரிப்பும் வால்டார்ப் அஸ்டோரியா ஓட்டலில் தங்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் நேருக்குநேர் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என கருதப்படுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை முறிவடைந்ததை அடுத்து, எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் அதிகரித்துவரும் நிலையில், இருநாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவார்களா? என்ற ஆவல் சர்வதேச அரசியல் பார்வையாளர் களிடையே மேலோங்கியுள்ளது.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.