நரேந்திர மோடிக்கு தமிழகத்திலும் ஆதரவு அலை

 திருச்சியில் வருகிற 26ந் தேதி நடைபெறும் பா.ஜ.க இளைஞர் மாநாட்டில் நரேந்திரமோடி கலந்துகொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜ.க தீவிரமாக செய்து வருகிது . இது குறித்து மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்ததாவது:–

இந்திய அரசியலில் ஒரு மாற்றுசக்தியாக, இளைஞர்களை வழி நடத்தும் எழுச்சிமிக்க தலைவராக, நாட்டுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு தமிழகத்திலும் ஆதரவு அலை வீசுகிறது.

திருச்சியில் 26ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் அவருடன் அகிலஇந்திய தலைவர் ராஜ்நாத் சிங், இளைஞர் அணியின் அகில இந்திய தலைவர் அனுராஜ்சிங் தாகூர் எம்.பி. ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

இந்தகூட்டத்துக்கு 2 லட்சத்துக்கு அதிகமானோர்களை திரட்ட திட்டமிட்டுள்ளோம். கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் பெயர் பதிவுசெய்வதற்காக 5 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பபடிவத்தில் பெயர், ஆணா, பெண்ணா, கல்வி, வயது, தொழில், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், பா.ஜ.க.,வில் ஏற்கனவே உறுப்பினரா? உறுப்பினராகசேர விருப்பமா? உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும். பெயர்பதிவு அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி நடந்துவருகிறது. ஆன்–லைனில் விண்ணப்பிப்பது வருகிற 1ந் தேதி தொடங்க உள்ளது.

மாநாட்டுக்கு தொண்டர்களையும், பொதுமக்களையும் வரவேற்கும்வகையில் எழுச்சி பாடல்கள் அடங்கிய சி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் இது வெளியிடப்படும்.
மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

நரேந்திரமோடி கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக மாவட்ட தலைவர்கள்கூட்டம் கமலாலயத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அகில இந்தியசெயலாளர் முரளிதர ராவ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாநாட்டு நுழைவுகட்டணம் முடிவுசெய்யப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மாநாட்டுக்கான சின்னம் (லோகோ) இன்று மாலை வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...