இந்திய சரித்திரம் எத்தனையோ தலைவர்களை கண்டெடுத்துள்ளது..எல்லோரும் ஒவ்வொரு வகையில் சிறப்பானவர்கள்..
ஆட்சி கட்டிலில் ஏறியது முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள்.."ஒரு இஞ்ச் கேப் கூட " விடாமல்..இந்தியாவின் அத்தனை மீடியாக்கள் மற்றும், அரசியல் கட்சிகளாலே வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டித்தீர்க்கப்பட்ட பின்பும் எழுந்து நிற்கும் ஒருதலைவனை இந்திய சரித்திரம் இதுவரை கண்டதில்லை..
அதுதான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி…63 வயதைகடந்து இன்று 64வது வயதில் அடியெடுத்து வைக்கும் இம்மாமனிதர், 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு முன்பு, இந்திய அரசியல் கட்சி ஒன்றின் அகில இந்திய நிர்வாகி என்று மட்டுமெ அறியப்பட்டவர்..
குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மட்டும் நடந்திருக்காவிட்டால், நரேந்திர மோடி இந்தியமாநிலங்களில் உள்ள சாதாரண முதலமைசர்களில் ஒருவராக மட்டுமே இருந்திருப்பார்..
சரித்திரம் எத்தனையோ சாதனைகளை செய்திருக்கிறது..அதில் மிக முக்கியமானது இது..கோத்ராவில் 58 அப்பாவிகள் உயிரோடு எரிப்பு–அதன் எதிர் விளைவினால், 1000 பேர் பலி—அதை வைத்து நடத்தப்பட்ட அவதூறுகள், தூஷணைகள், பொய்பிரச்சாரங்கள், –இப்படி உலக சரித்திரத்தில் ஹிட்லர் காலத்தில், கோயபல்ஸ் கூட செய்திராத சம்பவங்கள் நடைபெற்றது….
இதையெல்லாம் மீறிய எழுச்சி எது…மோடியால் சாதிக்க முடிந்த "வளர்ச்சி " யே அந்த எழுச்சியானது..
என்ன புள்ளி விவரங்கள் –எத்தனை புள்ளி விவரங்கள் வேண்டுமானாலும் தரலாம்..மோடியின் சாத்னைகளுக்கு சான்றுதர..
புள்ளி விவரங்கள் மூலம் பூர்ஷ்வாக்களை எதிர்க்கும் மார்க்சிஸ்டுகள் கூட மருதலிக்கமுடியாத…சாதனைகள் நரேந்திர மோடியுடையது..
உலகின் மிகச்சிறந்த மாநில நிர்வாக செயலகம், என்ற ஐ.நா.வின் சான்றிதழோடு, நூற்றுக்கணக்கான பட்டயங்களுக்கு சொந்தக்காரர் நரேந்திர மோடி..
அன்று சந்திர சேகர் பிரதமராக இருந்த போது, இந்தியாவின் ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தையெல்லாம், வெளிநாடுகளில் அடகு வைத்து,"அந்நிய செலாவணி கையிருப்பை" சரிகட்டியது போன்ற நிலைக்கு இன்றைய இந்தியாவை ஐ.மு.கூ ஆட்சி தள்ளியுள்ளது..
அதல பாதாளத்திற்கு சென்று விட்ட இந்திய பொருளாதாரம், இந்திய ரூபாயின் மதிப்பு, இந்தியாவின் சுயகவுரம், ஆகியவை மீட்டெடுக்கப்படவேண்டுமல்லவா?
இதை செய்யும் திறமை படைத்த அர்ச்சுனன், அக்கினி புத்திரன், அபிமன்யூ,,வாக நரேந்திர மோடியை இந்திய மக்கள், குறிப்பாக இந்திய இளைஞர்கள் பார்க்கிறாரகள்..
"வா..மோடி…வா"..இன்றைக்கு பிறந்தநாள் காணும் உன்னை வாழ்த்துவதோடு, இந்தியாவும் இந்தியர்களின் கவுரவுமும் காப்பாற்ற…எங்களை வாழவைக்க…வா..மோடி..வா..
அடுத்த 180 நாட்களில் நடை பெற இருக்கும் இந்தியாவின் தேர்தல் இந்தியர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்பதால், எழுச்சி மிக்க இளைய பாரத்ததின் தலைமை ஏற்க வா…மோடி..வா..
உன் வாழ்க்கை வசந்தமல்ல…அது இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டும் சூறாவளி..
ஆம் நன்மை தர புறப்பட்டுவிட்ட சுனாமியே..வா…நரேந்திர மோடியே வா…இந்தியாவின் தலைமை ஏற்க வா…வா…வாழ்த்துகிறோம்…வனங்குகிறோம்..வா…வாவா..
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.