முதல்வராக தொடர்ந்து 12 ஆண்டுகளை பதவிவசித்து சாதனை படைத்துள்ளார் நரேந்திரமோடி. குஜராத் முதல்வராக கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி நரேந்திரமோடி பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற 3 சட்டமன்ற தேர்தல்களில் பாஜ அமோகவெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் முதல்வராக நீடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் முதல்வர்பதவியில் 12 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். இதைமுன்னிட்டு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 63 வயதானவரான நரேந்திரமோடி தொடர்ந்து மூன்று முறை பேரவைத்தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பதவி வகித்துவருகிறார்.
கடந்த 12 ஆண்டுகளில் மோடியின் தலைமையில் குஜராத்மாநிலம் அபாரவளர்ச்சி பெற்றிருப்பதாகவும், குஜராத்தின் வளர்ச்சி திட்டங்களை மற்ற மாநிலங்களும் பலநாடுகளும் பின்பற்றி வருவதாகவும் அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக குஜராத் அரசு அனைத்துதரப்பினரின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தியதே தவிர, குறிப்பிட்ட எந்தஒரு மதத்தவரையும் திருப்திப் படுத்தும் திட்டங்களை செயல்படுத்தவில்லை.
மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னு தாரணமாக குஜராத் மாநிலம் திகழ்கிறது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்றகலவரத்தில் 1,000 பேர் உயிரிழந்தனர். அந்த கலவரத்தில் மோடிக் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் கலவரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக்குழு அவர் குற்றமற்றவர் என உறுதிப்படுத்தியது.
2002-ஆம் ஆண்டுக்கு பின்னர் மாநிலத்தில் எந்தவிதகலவரமும் நடைபெறவில்லை என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் பல்வேறு சாதனைதிட்டங்கள் அந்த செய்திகுறிப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.